ஸ்ரீ தங்காள் ஸ்ரீ பெரியக்காண்டியம்மன் திருக்கோவிலில் முதல் முறையாக குடிபாட்டுக்காரர்களின் குடும்ப விருத்திக்காக திருவிளக்கு பூஜை வரும் ஞாயிற்றுக்கிழமை 02/02/2025 அன்று மாலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணிவரை அய்யர் அவர்கள் சிறப்பாக நடத்திக்கொடுக்க உள்ளார்கள். அதுசமயம் விளக்கு பூஜையில் கலந்துகொள்ள ஊர் பொதுமக்கள் மற்றும் குடிபாட்டுக்காரர்களை அன்புடன் அழைக்கின்றோம். மேற்படி விளக்கு பூஜையில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் நுழைவுக்கட்டணமாக ரூ400/-( பூஜை சாமான் கள் உட்பட) செலுத்தி தங்களின் பெயர்களை 31/01/2025 க்குள் பதிவு செய்யக்கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கலந்து கொள்பவர்கள் தங்களது வீட்டிலிருந்து விளக்கு, தாம்பாலத்தட்டு, மணி, சூடத்தட்டு, பஞ்சபாத்திரம் மற்றும் உட்காருவதற்கு விரிப்பு அல்லது பலகை கட்டை கொண்டுவரவேண்டும்.
பூஜையின் முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Designed & Maintained byGlobal Soft Solutions