கோவில்கும்பாபிஷேகம் மற்றும் ஸ்ரீ தங்காள் ஸ்ரீ பெரியக்காண்டியம்மன் சிலைகளை கற்சிலையாக மாற்றம் செய்வது தொடர்பாக உடுக்கு பூசாரியை வைத்து சாமியின் உத்தரவு கேட்கும் நிகழ்வு அனைத்துக்குடிபாட்டுக்காரர்கள் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது பூசாரிக்கு அருள் வந்து வாக்கினை கொடுத்தார்கள். அதன் சுருக்கமான விளக்கம் கற்சிலை வைக்கலாம் என்றும் ஆனால் சாமிக்கு எந்த படையலையும் நிறுத்தக்கூடாது என்றும் ஊரில் தீண்டுதல் இருந்தால் ( பெரிய காரியம், பெண் குழந்தைகள் பூப்பெய்தல் மற்றும் குழந்தை பிறப்பு) கோவிலை பூட்டாமல் யார் வீட்டில் தீண்டுதல் நிகழ்கிறதோ அவர்களை தவிர்த்து பிற குடும்பத்தினரின் அன்றாட கோவில் பணிகளை செய்ய உத்தரவிட்டது. அதேபோல கோவில் பொங்கலை வருடாவருடம் தீட்டு உள்ள குடும்பத்தை தவிர்த்து பொங்கல் வைக்கலாம் என அருள் வாக்கு கூறினார்கள். அதன் அடிப்படையில் 2024 தைமாதம் ஒன்றாம் நாள் கோவில் பொங்கலை திரு.அ.பொ.தங்கராஜுபிள்ளை மற்றும் திரு.அ.ம.நாகரெத்தினம் பிள்ளை குடும்பத்தார்கள் மற்றும் புதிய் வழிமுறைகளை கடைபிடித்து பொங்கல் திருவிழாவினை மிக சிறப்பாக நடத்தினார்கள். ஸ்வாமிகளின் வாக்குபடி பொங்கல் அன்று கருடபகவான் ஆசியையும் கொடுத்தார்.
பொங்கல் திரு விழாவை
பெரும் சிறப்பு பொங்கல் திரு விழாவாக மாற்றி,
நம் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட !
இன் நிகழ்வை கருடாழ்வார் உறுதி செய்ய..
கருடர் தரிசனம்
ஆழ்வார்கள் தரிசனம்
ஆழ்வார்கள் தரிசனம்
அரங்க வரத ஸ்வருபம்..
நல்ல நாளாக முத்திரை பதித்த திரு நாள்!
நம் தெய்வங்கள் நமக்கு அருள் புரியட்டும்!🙏
கோவில்கும்பாபிஷேகம் மற்றும் ஸ்ரீ தங்காள் ஸ்ரீ பெரியக்காண்டியம்மன் சிலைகளை கற்சிலையாக மாற்றம் செய்வது தொடர்பாக உடுக்கு பூசாரியை வைத்து சாமியின் உத்தரவு கேட்கும் நிகழ்வு அனைத்துக்குடிபாட்டுக்காரர்கள் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது பூசாரிக்கு அருள் வந்து வாக்கினை கொடுத்தார்கள். அதன் சுருக்கமான விளக்கம் கற்சிலை வைக்கலாம் என்றும் ஆனால் சாமிக்கு எந்த படையலையும் நிறுத்தக்கூடாது என்றும் ஊரில் தீண்டுதல் இருந்தால் ( பெரிய காரியம், பெண் குழந்தைகள் பூப்பெய்தல் மற்றும் குழந்தை பிறப்பு) கோவிலை பூட்டாமல் யார் வீட்டில் தீண்டுதல் நிகழ்கிறதோ அவர்களை தவிர்த்து பிற குடும்பத்தினரின் அன்றாட கோவில் பணிகளை செய்ய உத்தரவிட்டது. அதேபோல கோவில் பொங்கலை வருடாவருடம் தீட்டு உள்ள குடும்பத்தை தவிர்த்து பொங்கல் வைக்கலாம் என அருள் வாக்கு கூறினார்கள். அதன் அடிப்படையில் 2025 தைமாதம் இரண்டாம் ஆண்டு 2025 பொங்கல் விழா திரு.அ.பொ.தங்கராஜுபிள்ளை குடும்பத்தார்கள் மற்றும் புதிய் வழிமுறைகளை கடைபிடித்து பொங்கல் திருவிழாவினை மிக சிறப்பாக நடத்தினார்கள். .
எல்லா கோயில் பங்காளிகளின் வீடுகளில் ஒரு வருடம் யாரும் இறக்காமல் இருந்தால் அந்த வருடம் கோயில் பொங்கல் தைமாதம் 1ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.
பொங்கல் தினத்தன்று விடியற்காலை அனைத்து பங்காளிகளும் கோவிலுக்கு சென்று பங்காளிகளுக்கு ஒதுக்கப்பட்ட வரிசைப்படி ( வரிசை குறிப்பிட்டது போல) மண் அடுப்பு வெட்டி, களிமண் மற்றும் சாணம் போட்டு மெழுகி மண் அடுப்பை தயார் செய்து பின் அந்த அடுப்பிற்கு மாகோலங்கள் போட்டு நன்றாக வெயில் படும்படி செய்யவேண்டும்
முன்னதாக அவரவர்கள் தங்கள் குடும்பத்திற்கு வேண்டிய அளவு மண் பானையினை தேர்ந்தெடுத்து ( சர்க்கரை பொங்கல் - 1 பானை மற்றும் பானை மூடுவதற்கான 1 - சட்டி, அதேபோல் வெண்பொங்கல் வைப்பதற்கு - 1 பானை மற்றும் பானை மூடுவதற்கான 1- சட்டி மேலும் காய்கறி வைப்பதற்கு ஒரு சட்டி மொத்தம் 5 உருப்படி ஆர்டர் செய்தல் வேண்டும்.)
முன்னதாக ஆர்டர் செய்த பானைகள் மற்றும் சட்டிகள் அனைத்தும் தைமாதம் 1 ஆம் தேதி விடியற்காலை மாரியம்மன் கோவிலில் வைத்துவிட வேண்டியது.
நல்ல நேரம் பார்த்து அனைத்து கோயில் பங்காளிகளும் ஒன்றாக மாரியம்மன் கோவில் சென்று அங்குள்ள அவரவர்களின் பானை சட்டிகளை மாரியம்மன் கோவிலில் ஒரு பூஜையை போட்டுவிட்டு பானை சட்டிகளை எடுத்துக் கொண்டு ஊர்வலமாக ஸ்ரீ பெரியக்காண்டியம்மன் கோவிலை பிரகாரம் செய்து கோவில் மண்டபத்தில் வரிசையாக வைத்து அங்கும் ஒரு பூஜையை போடவேண்டியது. பின் பங்காளிகள் அவரவர் வீடு திரும்ப வேண்டியது.
மாலை நல்ல நேரம் பார்த்து பங்காளிகள் அனைவரும் பொங்கல் செய்வதற்கான சாமான் கள் மற்றும் விறகுகளுடன் ஸ்ரீபெரியக்காண்டியம்மன் கோவில் வரவேண்டும். பின் அவரவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் பொங்கல் செய்வதற்கான வேலைகளை ஆரம்ப்பிக்கலாம்
பொங்கல் (சர்க்கரை மற்றும் வெண் பொங்கல் மற்றும் காய்கறிகள்) அனைவரும் செய்து முடித்தவுடன் கோவிலில் பூஜை செய்து அனைத்து பானைகளிலிருந்து பொங்கல், தேங்காய், வாழைப்பழம் எடுத்து பொது பூஜை செய்யப்படும். பூஜை முடிந்தவுடன் அவரவர் தாங்கள் செய்த பொங்கலை அவரவர் வீட்டிற்கு எடுத்து செல்ல வேண்டும்.
இதுவே பொது பொங்கலின் முறைகள் ஆகும்.
Designed & Maintained byGlobal Soft Solutions